ரூ. 35000த்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்… பரவசப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்…

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்சமயம் குறைந்த செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூருவை சேர்ந்த யுலு மொபைலிட்டி நிறுவனம்  உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் தற்சமயம் சீன மோட்டார்சைக்கிள்களை தான் பெரும்பான்மையாக பயன்படுத்தி வருகிறது. இதன் பயன்பாட்டை குறைக்கும் விதமாக யுலு நிறுவனத்தில் பஜாஜ் நிறுவனம் ரூ.8 மில்லியனை முதலீடு செய்துள்ளது.
 
எலக்ட்ரிக் யுலு பிராண்டிங்கில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல்கள்  வெளியாகியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ. 35 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுவரை இந்நிறுவனம்  நாடு முழுக்க சுமார் ஐந்து நகரங்களில் 4000 ஸ்கூட்டர்களை விற்றிருக்கிறது.
 
யுலு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 48 வோல்ட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இவை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
author avatar
Kaliraj