கொரோனா கவசத்துடன் நூதன முறை விழிப்புணர்வு - கலக்கும் பெங்களூர் போலீசார்!

கொரோனா வைரஸின் தாக்கம் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா என பல நாடுகளில்

By Rebekal | Published: Mar 31, 2020 05:16 PM

கொரோனா வைரஸின் தாக்கம் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா என பல நாடுகளில் மிகவும் அதிக அளவில் உள்ள நிலையில், இந்தியாவுக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக மருத்துவர்கள் காவலர்கள் அரசியல்வாதிகள் அனைவருமே போராடி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் சிலர் ஒத்துழைப்பு கொடுக்காமல் அந்த விதிமுறைகளை மீறிய நடக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள பெங்களூர் மாநிலத்தில் இந்த வைரஸ் குறித்த நூதன முறையில் ஆன விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். வாகனத்தில் வருபவர்களுக்கு வைரஸ் போன்ற தலைக்கவசம் அணிந்த காவலர்கள் அவர்களை தொட்டு அவர்களுக்கு வைரஸ் தொற்றி விட்டது என்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தலையில் கொரோனா வைரஸ் வடிவிலான கவசத்தையும் அணிவித்து அனுப்புகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்களும் தற்போது காவலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc