நாளை முதல் டெல்லி எல்லை திறப்பு.! கெஜ்ரிவால் அறிவிப்பு

டில்லியின் அனைத்து எல்லைகளும் நாளை முதல் திறந்துவிடப்படுகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு வணிக வாளகங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்களை நாளை முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கிஉள்ளது. இதையெடுத்து, டில்லியில் நாளை முதல் அனைத்து உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்றும் டில்லியின் அனைத்து எல்லைகளும் திறந்துவிடப்படுகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் விருந்து அரங்குகள் திறக்க அனுமதி இல்லை, ஜூன் மாத இறுதிக்குள்  15,000 படுக்கைகள் தேவை என்பதால், டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும்.

மத்திய அரசின் கீழ் வரும் மருத்துவமனைகளில் வெளி மாநிலத்தவர்களுக்கும் அனுமதி உண்டு என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளர். மேலும், மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட 70% கொரோனா வரியை திரும்ப பெறப்படுகிறது என தெரிவித்தார்.

author avatar
murugan