திருமண செலவை குறைத்து..கொரோனா சிகிச்சை முகாமிற்கு நன்கொடையை வழங்கிய புது தம்பதிகள்.!

திருமண செலவை குறைத்து கொரோனா சிகிச்சை முகாமிற்கு 50 படுக்கைகள், மெத்தை ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நன்கொடையாக வழங்கினர்.

எரிக் லோபோ மற்றும் மெர்லின் டஸ்கானோ தம்பதியினர் அவர்களுது ஊரில் உள்ள தேவாலயத்தில் வைத்து ஜூன் 20 அன்று திருமணம் செய்தனர். திருமண விழா முடிந்ததும் 50 படுக்கைகள், மெத்தை மற்றும் தலையணைகளை நன்கொடையாக தனிமைப்படுத்தல் மையத்திற்கு வழங்கின. மேலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தனிமைப்படுத்தல் மையத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில்களை ஏற்பாடு செய்வது போன்ற திட்டங்களில் இவர்கள் பணியாற்றி உள்ளார்களாம். மேலும் கொரோனா மையங்களில் தேவைகள் குறித்து மாவட்டத்தின் வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை பிரிவு அதிகாரியிடம் பேசி நாங்கள் திருமணத்திற்காக செலவழிக்கும் பணத்தை குறைக்க முடிவு செய்து அதற்கு பதிலாக கொரோனா பராமரிப்பு மையத்திற்கு நன்கொடையை வழங்குவோம் என்று கூறியுள்ளார்.

மும்பையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,39,101-ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டுமே 248 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் மும்பையில் நேற்று மட்டுமே 846 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.