முக்கோண வடிவில் நாடாளுமன்றத்தின் புதிய வளாகம்…?

முக்கோண வடிவில் நாடாளுமன்றத்தின் புதிய வளாகம்…?

  • தற்போது உள்ள இந்த நாடாளுமன்ற கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
  • புதிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேசைகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது உள்ள இந்த நாடாளுமன்ற கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் புதியதாக கட்டவுள்ள நாடாளுமன்ற வளாகம் முக்கோண வடிவில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

வருகின்ற 2024-ம் ஆண்டிற்குள் நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப்பணிகள் முடிக்கவுள்ளதாக சென்ட்ரல் விஸ்டா நிறுவனம் கூறியுள்ளது. இந்த நாடாளுமன்ற வளாகத்தில் 1350 உறுப்பினர்கள் வரை அமர முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள நாடாளுமன்ற மையத்தில் உள்ள இரண்டு வரிசைகளில் மட்டுமே மேசைகள் உள்ளது.புதிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேசைகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube