பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனா ..! அப்போ அஸ்வின் ..!

ஐபிஎல் தொடரில் அஸ்வின் 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

By Fahad | Published: Apr 01 2020 02:40 AM

ஐபிஎல் தொடரில் அஸ்வின் 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இதில் கடந்த இரண்டு வருடங்களாக அஸ்வின்  கிங் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். அஸ்வின் கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். நடந்து முடித்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி லீக் போட்டியுடன் வெளியேறியது. இதையெடுத்து பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனை நியமனம் செய்ய அந்நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பஞ்சாப் அணிக்கு அஸ்வினுக்கு பதிலாக கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.