பிஎஸ்என்எல்(BSNL) இன் புதிய அதிரடி பிளான்.!

  அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தனது 4 ஜி சேவைகளை (பான்-இந்தியா

By Fahad | Published: Mar 30 2020 05:21 PM

  அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தனது 4 ஜி சேவைகளை (பான்-இந்தியா அடிப்படையின் கீழ்) கேரளாவில் அறிமுகப்படுத்தியுள்ளதென்பதை அனைவரும் அறிவோம். ஆனால், பிஎஸ்என்எல் அதன் 5 ஜி சார்ந்த பணிகளில் மிகத்திவீரமாக ஈடுபட்டுள்ளது. பிஎஸ்என்எல் ஆனது அதன் 4ஜி சேவையின் தொடக்கதையடுத்து நோக்கியா, இசெட்டிஇ, கொரிய நிறுவனம் மற்றுமொரு ஜப்பானை சேர்ந்த நிப்பான் டெலிகிராப் மற்றும் டெலிபோன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 5ஜி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுவருகிறது. அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை (பான்-இந்தியா அடிப்படையிலான) தில்லி மற்றும் மும்பை தவிர இதர பகுதிகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் அதன் 4ஜி நெட்வொர்க்குகளை அமைப்பதற்கான உடன் படிக்கைகளை நோக்கியா மற்றும் இசெட்டிஇ நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதும், 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தமாக தொலைத் தொடர்புத் துறை (DoT) நிறுவனத்திடமும் பிஎஸ்என்எல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2100 மெகாஹெர்ட்ஸ் பேண்டில் 5 மெகாஹெர்ட்ஸ் அளவிலான 4ஜி சேவைகளை பயன்படுத்துவதற்கு (ராஜஸ்தான் தவிர்த்து - 800 மெகாஹெர்ட்ஸ்) அரசாங்கத்திடம் பிஎஸ்என்எல் கேட்டுக்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர்  ஸ்ரீவஸ்தவாவைப் பொறுத்தவரை 5ஜி சேவையானது அடுத்த வருடம் இந்தியாவிற்கு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 4ஜி சேவையை வைத்து ஜியோவுடன் போட்டியிட முடியாதென்பதை நன்கு அறிந்த பிஎஸ்என்எல், தொலைநோக்கு பார்வையுடன் அதன் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளையும் அமைத்து வருகிறது.

More News From tech tamil news