கேள்விக்குறியாகி ஒலியின் பதவி??காத்மாண்டுவில் கதகதப்பு!

நேபாள பிரதமரின் பதவிக்கு எதிராக காத்மண்டுவில் குரல் எதிரொலிக்க துவங்கியுள்ள நிலையில் கட்சியின் நிலைக்கூட்டம் நாளை கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேபாள  நாட்டில் பிரதமர்  பதவி வகித்து வருபவர் கே.பி.ஷர்மா ஒலி இவரை அப்பதவி இருந்து விலகுமாறு கூறி ஆளுகின்ற நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கடும் போர்க்கொடி துாக்கி உள்ள நிலையில் அவசரமாக மீண்டும் நாளை கட்சியின் நிலைக்குழு கூட்டம் குறித்து  தகவல் வெளியாகி உள்ளதுநடக்கிறது. கூட்டத்தில் நேபாள பிரதமர் ஒலியின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளது.

கடந்த ஜூன் 30ந்தேதில் நேபாள கம்யூ கட்சியின் நிலைக் குழு கூட்டம் ஆனது பலுவடாரில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த புஷ்ப கமல் பிரசண்டா அண்டை நாடான இந்தியா மீது பொய்யானன குற்றச்சாட்டை பிரதமர் கூறி நல்லுறவை பாதிக்கின்ற வகையில் பேசியதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்று ஷர்மாவை பிரசண்டா கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில்  இவ்வாறு கூட்டணிக்குள் எதிர்ப்பு எழுந்தது பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.இதனிடையே நேபாள எதிர்காலம் கருதி பிரமராக இருந்து வரும் கே.பி.சர்மா ஒலியை பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பது  குறித்தும்  தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற இருந்த நிலையில் திடீரென்று கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு நாளை  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு நாட்டிலும்; கட்சிக்குள்ளும் எழுந்த நிலையில் ஒலியின் பிரதமர் பதவி தப்புமா? என்பது நாளை தெரிய வருவம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
kavitha