வளர்த்த கிடா மார்பில் முட்டியது….இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்… சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்…

வளர்த்த கிடா மார்பில் முட்டியது….இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்… சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்…

Default Image

இந்தியாவுக்கு சொந்தமான  லிபுலேக், காலாபாணி, லிம்பியதுரா உள்ளிட்ட பகுதிகளை தனது நாட்டு எல்லையுடன் சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் வெளியிட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவ   இந்தியா – சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை பிரச்னை கடந்த 1962ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. இதேபோல், இந்தியா-நேபாளம் இடையேயான எல்லை பிரச்னையும் பல ஆண்டாக தீர்க்கப்படாமலேயே உள்ளது. காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.  ஆனால் அந்த பகுதிகளை  உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்திய அரசு பல காலமாக தெரிவித்து வருகிறது.  இதேபோல அப்பகுதிகள் நேபாளத்தின் தார்சுலா மாவட்டத்தை சோ்ந்தவை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது. எனவே, இவை சர்ச்சைக்குரிய பகுதிகளாகவே இருந்து வருகின்றன.

Explained: Kalapani, a small area on the India map that bothers ...

   இந்நிலையில், திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்ரீகர்கள் பயணம் செய்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையில், லிபுலேக் கணவாய் வழியாக இந்திய அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைதான். இந்த சாலை சமீபத்தில் திறக்கப்பட்டது. எனவே இந்திய யாத்ரிகர்கள் நேபாளம் செல்லாமலே கைலசம் செல்லலாம். இதன் மூலம் தனது சுற்றுலா துறைக்கு பெருத்த அடியாக இருக்கும். இதனால் எரிச்சலடைந்த நேபாளம்,காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளை இணைத்து நாட்டின் புதிய அதிகாரப்பூர்வ வரைபடத்தை நேபாளம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா மட்டுமின்றி உபி.யின் கோரக்பூர் அருகே உள்ள சாஸ்தா உள்ளிட்ட பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.இது இந்தியா, நேபாளம் இடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

NEPAL ARMY In Demand For Polls | New Spotlight Magazine

    இந்த விவகாரத்தில் சீனாவின் குள்ள நரித்தனம்  இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.  நேபாளம் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்த சீனா நினைக்கிறது. அதோடு நேபாளத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது. இந்தியாவை இதன் மூலம் வீழ்த்த நினைக்கிறது. மேலும் இதுகுறித்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள்,  இது நேபாள அரசின் முட்டாள்தனமான முடிவு என்றும், இதை இந்திய அரசுடன் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியன் கூறுகையில், ‘‘காலாபாணி எல்லை பிரச்னை இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலானது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தீா்வு காண வேண்டும்,’’ என்றார்.

Kalapani Territorial Dispute: Origin, history, significance ...
இதேபோல், புதிய வரைபடம் விட்டு இந்தியாவை எதிர்க்கும்  நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது சர்ச்சை பேச்சால் மேலும் இந்தியாவை அவமதித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘நேபாளத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பானது வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால்தான் பரவி இருக்கிறது. சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வருபவர்களால்தான், நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவின் வழியே பரவும் வைரஸ் சீனா மற்றும் இத்தாலிய கொரோனா வைரசை விட ஆபத்தானது,’’ என்றார். 

Join our channel google news Youtube