திருடர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதிக்கு தமிழக அரசின் சார்பாக சிறப்பு விருது!?

திருடர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதிக்கு தமிழக அரசின் சார்பாக சிறப்பு விருது!?

நெல்லையில் சில நாட்களுக்கு முன்னர் சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை அவர்களது தோட்ட வீட்டில் தனியாக இருந்தபோது, இரண்டு திருடர்கள் அரிவாளோடு   தாக்கி திருட முயற்சித்தனர். அரிவாளோடு அவர்கள் இருந்தாலும் இந்த வயதான தம்பதியினர் கொஞ்சமும் அச்சமின்றி, அவர்களை அடித்து விரட்டினர். கையில் கிடைத்த பொருளை எடுத்து அவர்கள்மீது வீசி விரட்டினர். அரிவாளுடன் திருடர்கள் இருந்தாலும் அவர்களை கண்டு பயப்படாமல் விரட்டி அடித்த இந்த வீரத்தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர்களுக்கு வீரதீர செயல்கள் புரிந்ததற்காக தமிழக அரசு விருது வழங்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்வர் எடப்பாடி பழநிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.