பல்வேறு படங்கள் போட்டிக்கு வருவதால் படம் வெளியாவது தள்ளி வைப்பு....

நடிகர் ஜெய் மற்றும்  வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள

By kaliraj | Published: May 09, 2019 10:57 PM

நடிகர் ஜெய் மற்றும்  வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம்  நீயா 2 , இந்தபடம்   இந்த வாரம் 10ம் தேதி வெளியாக இருந்த நிலையில், வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் எல் சுரேஷ் இயக்கத்தில் நடிகர்  ஜெய், வரலக்ஷ்மி, லக்ஷ்மி ராய், கேத்ரீன் தெரசா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நீயா 2.இந்த படம்  முழுக்க முழுக்க பாம்பின் பழி வாங்கும் குணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இப்படம் வரும் 10ம் தேதி  வெளியாக  இருந்தது.கிட்டத்தட்ட  கிட்டத்தட்ட 4 படங்கள் மொத்தமாக இந்த வாரம் திரைக்கு வரயிருப்பதாலும், குறிப்பாக நடிகர் விஷாலின் அயோக்யா படம் திரைக்கு வரயிருப்பதால், நீயா 2 படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று கருதிய விநியோகஸ்தர்கள் இப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக வரும் 24ம் தேதி நீயா 2 படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc