நீட் ஆள்மாறாட்ட விவகாரம் !  தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து தேனி மருத்துவக் கல்லூரியில்  தனிப்படை போலீசார்

By venu | Published: Sep 22, 2019 04:52 PM

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து தேனி மருத்துவக் கல்லூரியில்  தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர் உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்று தேனி மருத்துவ  கல்லூரியின் முதல்வரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில் இன்று  தேனி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc