பாமாயில் விவகாரம்.. இந்தியாவின் நடவடிக்கைக்கு எந்த எதிர் நடவடிக்கையும் இல்லை.. நாங்கள் சிறிய என நாடு மலேசிய பிரதமர் கருத்து..

பாமாயில் விவகாரம்.. இந்தியாவின் நடவடிக்கைக்கு எந்த எதிர் நடவடிக்கையும் இல்லை.. நாங்கள் சிறிய என நாடு மலேசிய பிரதமர் கருத்து..

  • காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவுக்கு இந்தியாவின் பதிலடி.
  • எதிர் நடவடிக்கை கொடுக்கும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை..

காஷ்மீர் இந்தியாவால்  ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியா கவலை கொண்டுள்ளது என்று கடந்த  டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டின் முடிவில் மலேசிய பிரதமர்  கூறியிருந்தார். இதற்க்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்திலும் இதே கருத்தை மலேசிய பிரதமர்  கூறியிருந்தார்.

Image result for malaysia-india export import problem

அவர், இந்திய குடியுரிமை சட்டத்தில், “இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியக் குடிமக்களாக ஆவதில் இருந்து தவிர்க்கப்பட்டால் அது நியாயமல்ல,” என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்தியா மலேசியவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயிலுக்கு கடும்  கட்டுப்பாடுகளை விதித்தது.

Image result for malaysia-india export import problem

இந்நிலையில், இந்தியா விதித்த கட்டுபாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர், ” இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க நாங்கள் சிறிய நாடு; எனவே  இதனை எதிர்கொள்ள சில வழிகளை கண்டறிய வேண்டும்,” என தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக மலேசியாவின் மிகப்பெரிய பாமாயில் சந்தையாக இந்தியா உள்ளது, ஆனால் தற்போதைய தடை மலேசியாவிற்க்கு பெரிய இழப்பாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்..

author avatar
Kaliraj
Join our channel google news Youtube