சேகர் பாசு மறைவு அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்- அமித்ஷா ட்விட் ..!

சேகர் பாசு மறைவு அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்- அமித்ஷா ட்விட் ..!

மூத்த அணு விஞ்ஞானியும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் சேகர் பாசு கொரோனாவால்  இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 68, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

இவர் 2014-இல் பத்மஸ்ரீ விருது பெற்றார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா  தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவு ஒன்றை பத்திவிட்டுள்ளார். அதில்,  புகழ்பெற்ற அணு விஞ்ஞானி டாக்டர் சேகர் பாசுவின் மறைவு உலகெங்கிலும் உள்ள தேசத்திற்கும், அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும். விஞ்ஞானத்தின் சாம்பியனாக, அவரது முன்னோடி பணிகள் இந்திய அணுசக்தி திட்டங்களுக்கு பெரிதும் உதவியது.

அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube