தன் காதலனுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த நயன்தாரா !

தன் காதலனுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த நயன்தாரா !

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் இன்று 46-வது நாளாக அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதிலும் கடந்த சில நாள்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு உள்ளது. இன்று ஆடி கருட சேவை என்பதால் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் இன்று பிற்பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் மட்டும் மாலை 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணி உடன் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் நிறுத்தப்பட்டது.நாளையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைவதால் நள்ளிரவு 1 மணிக்கு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அத்திவரதரை வழிபட்டனர். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் நயன்தாராவிற்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது.

Latest Posts

60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.!
சேகர் பாசு மறைவு அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்- அமித்ஷா ட்விட் ..!
செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!