இதுதான் நான் நடித்த மிக மோசமான கேரக்டர்! - நயன்தாரா கூறிய ஷாக்கிங் பதில்!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின், லேடி சூப்பர் ஸ்டார்

By manikandan | Published: Nov 06, 2019 07:34 AM

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின், லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கபடுபவர் நயன்தாரா. இவர் 2005இல் வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.  இவர் நடிப்பில் கடைசியாக தளபதி விஜயின் பிகில் படம் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது. அண்மையில் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியில் நயன் குறிப்பிடுகையில், தன் திரைப்பயணத்தில், மிகவும் மோசமான கேரக்டர் என்றால் அது கஜினி படத்தில் நான் நடித்த சித்ரா கதாபாத்திரம் தான் எனவும், அந்த கதாபாத்திரம் கல்பனா ( ஹீரோயின் அசின் நடித்தது ) கதாபாத்திரத்திற்கு இணையாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அந்த படம் வெளியாகி நான் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.' என தெரிவித்துள்ளார். தற்போது கஜினி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பாரில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc