வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் : நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிற நிலையில், இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த செய்தி வதந்தி என்று நயன்தாராவின் காதலனான விக்னேஷ் சிவன் மறுத்துள்ளார்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவின் புகைப்படம், பிரபலமான ஆங்கில  இடம் பெற்றுள்ளது. அந்த இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எப்போது வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.