நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜாலியாக இருக்க நாங்க செலவு செய்யணுமா அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்

Nayanthara-Vignesh Shiva is a joke

  • நடிகை நயன்தாரா கோலிவுட்  சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடபட்டு வருகிறார்.
  • இவர் தற்போது ரஜினிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
நடிகை நயன்தாரா கோலிவுட்  சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடபட்டு வருகிறார். இவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த  ஒன்றே.  இது ஒரு புறம் இருக்க  இவர் தற்போது ரஜினிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்க இருக்கிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினி ,யோகிபாபு, நயன்தாரா முதலியவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.  இதனை அடுத்து நடிகை நயன்தாராவும்  இயக்குனர் விக்னேஷ் சிவனும் சமீபகாலமாக காதலித்து வருகிறார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். எனவே இந்த படத்தின் கதை விவாதம்  சம்பந்தமாக இவரும்  மும்பை சென்று இருக்கிறார். எனவே லைகா நிறுவனத்திடம் அவர் தங்குமிடம் குறித்த வசதிகளை செய்து கொடுக்குமாறு விக்னேஷ் கேட்டுள்ளார். இவருடைய செலவுகள் பல லட்சங்களை தொட்டுள்ளதாக தற்போது தயாரிப்பு நிறுவனத்தினர்  புலம்பி வருகிறார்களாம்.