ஒரே வாரத்தில் கருவளையத்தை போக்கும் 5 இயற்கை வழிகள் இதோ..

இன்றைய கால கட்டத்தில் தொழிற்நுட்பங்களின் பங்கீடு மிக அதிகமாகவே உள்ளது. பலவித

By Hari | Published: Feb 04, 2019 02:10 PM

இன்றைய கால கட்டத்தில் தொழிற்நுட்பங்களின் பங்கீடு மிக அதிகமாகவே உள்ளது. பலவித தொழிற்நுட்பங்கள் இங்கு இருந்தாலும் மக்களை கட்டி போடும் திறன் அதிக அளவில் உள்ளவை ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகள் தான். இதன் திரையை அதிக நேரம் பார்த்து கொண்டே இருந்தால் உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் பலவித பாதிப்புகள் உண்டாகும். இவை உங்களின் முகத்தையும் பாதிக்க செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். முகத்தில் கருவளையங்களை உண்டாக்க கூடிய தன்மை இதற்கு உண்டு. கருவளையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து முகத்தின் அழகை முழுவதுமாக பாதிக்கும். இதை போக்க வீட்டில் உள்ள இந்த 5 பொருட்களே போதும்..! உருளைக்கிழங்கு கரு வளையங்களை போக்க உருளைக்கிழங்கை பச்சையாக எடுத்து அரிந்து கொண்டு, அதனை அரைத்து சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றை பஞ்சை பயன்படுத்தி கரு வளையங்கள் உள்ள பகுதியில் ஒத்தடம் போன்று கொடுக்கவும். 15 நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரால் கழுவிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கரு வளையங்கள் நீங்கி விடும். தக்காளி 1 ஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு முதலியவற்றை எடுத்து கொண்டு கலக்கி கொள்ளவும். இதனை கரு வளையத்தில் ஒரு நாளைக்கு 2 தடவை தடவி வந்தால் எளிதில் இதை போக்கி விடலாம். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயை துண்டாக அரிந்து கண் பகுதியில் இரவு முழுவதும் வைத்து மறுநாள் எடுத்தால் கண் வளையங்கள் குறைந்து வரும். இது கண்களுக்கு குளிர்ச்சியையும் சேர்த்து உண்டாக்கும். டீ பேக் ஏற்கனவே பயன்படுத்திய டீ பேக்கை கண் பகுதியில் வைத்து 30 நிமிடம் கழித்து எடுத்தால் கரு வளையங்கள் குறையும். இதனால் கண்களை பலவித பாதிப்புகளில் இருந்து காக்கலாம். ஆரஞ்சு 1 ஸ்பூன் ஆரஞ்சு சாற்றை சிறிது கிளிசரின் உடன் சேர்த்து கரு வளையங்களில் தடவினால் எளிதாக இதனை போக்கி விடலாம். மேலும், இது முகத்தையும் பொலிவாக மாற்றி விடும்.
Step2: Place in ads Display sections

unicc