தாய்ப்பாலை தானமாக அளித்து ஐந்து உயிர்களை காத்த உத்தம தாய்.. இதுவரை 12 லி வரை தானமாக வழங்கிய உயர்ந்த உள்ளம்…

  • குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரத்தை  சேர்ந்த 29 வயது இளம் தாயின் பெயர் ருஷினா மர்ஃபாஷியா ஆவர்.
  • இவர் 12 லிட்டர் வரை தானமாக வழங்கிய தாயுள்ளம்.

இவருக்கு  கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வியான் என்னும் ஒரு  ஆண் குழந்தை பிறந்தது.இந்த  குழந்தையின்  தேவைக்கு  போக, இவருக்கு அதிகப் பால்  சுரந்தது. எனவே, இதை உணர்ந்த ருஷினா மர்ஃபாஷியா , உலகின் கலப்படம் இல்லாத ஒரே பொருளான  தாய்ப்பாலை வீணாக்காமல் தேவைப்படும் குழந்தைகளுக்கு தானமாக வழங்க முடிவெடுத்தார்.இதன்படி இவர், அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  இருந்த 5 பச்சிளங் குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை வழங்க ஆரம்பித்தார். இவ்வாறு தொடர்ந்து 3 மாதங்களாக  சுமார் 12 லிட்டர் தாய்ப்பாலை வழங்கி, 5 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார் ருஷினா மர்ஃபாஷியா .

இதை தொடர்ந்து அந்த குழந்தைகளின் தாய்மார்கள் அவருக்கு மனநெகிழ்ச்சியோடு தங்களின் நன்றியை தெரிவித்தனர். மாம் என்ற தாய்ப்பாலை தானமாக அளிக்கும் அமைப்பிலும் ருஷினா உறுப்பினராக உள்ளார்.இந்த அமைப்பு ஆமதாபாத்தில் இயங்கி வருகிறது.  இந்த அமைப்பில்,இதுவரை  250 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் சார்பில் இதுவரை சுமார் 90 லிட்டருக்கும் மேற்பட்ட தாய்ப்பால் தானமாக அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kaliraj