பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

இந்தியாவின்  10 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வங்கிகள் இணைப்பை மத்திய அரசு தற்போது  மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், 2வது ஒருங்கிணைப்பாக 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இன்று இணைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளபோதும்,  திட்டமிட்டபடி வங்கிகள் ஒருங்கிணைப்பு இன்று அமலுக்கு வருகிறது. அதன்படி,

  • இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இன்று இணைகிறது. இனிமேல், அலகாபாத் வங்கிக்கிளைகள், இந்தியன் வங்கிக்கிளைகளாக செயல்பட தொடங்கும்.
  • இதேபோல், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அதனால், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள், இனிமேல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைகளாக செயல்படும்.
  • சிண்டிகேட் வங்கி, இன்று கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல், சிண்டிகேட் வங்கிக்கிளைகள், கனரா வங்கிக்கிளைகளாக செயல்படும்.
  • யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. மேற்கண்ட 2 வங்கிக்கிளைகளும் இனிமேல் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளைகளாக செயல்படும்.
  • இதன்மூலம், இந்தியாவில்  10 பொதுத்துறை வங்கிகள், தற்போது 4 வங்கிகளாக இணைகிறது. 
author avatar
Kaliraj