பிப்ரவரி 28-ஆம் தேதி!!இன்று தேசிய அறிவியல் நாள்!!

February 28th is National Science Day !!

  • தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர். சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் 1930ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தி அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் இந்திய அரசாங்கத்தாலும் மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

National Science Day is being celebrated in India. National Science Day is celebrated annually on the 28th of February in India. Sir. CV Raman discovered his famous Raman effect on this day. The discovery brought global fame to India and earned him the Nobel Peace Prize in 1930. To commemorate the occasion and to reach out to the underprivileged people of science, the Government of India declared it a National Science Day. Every year, this day is celebrated by the Government of India and the people on the basis of this goal.