குடியுரிமை திருத்த விவகாரம்.. உபி,.அரசு 40,000 பேர் பட்டியல் தயாரிப்பு.. போராட்டகாரர்கள் அதிருப்தி..

குடியுரிமை திருத்த விவகாரம்.. உபி,.அரசு 40,000 பேர் பட்டியல் தயாரிப்பு.. போராட்டகாரர்கள் அதிருப்தி..

  • உத்திரபிரதேச மாநிலத்தில்  உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் என முதலில்  40 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல்  தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்கும் என அரசியல் ஆர்வளர்கள் அச்சம்.

இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்தை  அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் மாநிலம் தற்போது  உருவெடுத்துள்ளது. இதன்படி உத்தர பிரதேசத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் 40 ஆயிரம் பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 இந்துக்கள் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடி சீக்கியர்கள் அதிகமாக உள்ளனர். இதுபோல், மொத்தம் 19 மாவட்டங்களில் இந்த பட்டியல் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Image result for national citizenship act

இதிலும் குறிப்பாக பிலிப்பிட் மாவட்டத்தில் மட்டும் 30,000 முதல் 35,000 பேர் இந்திய குடியுரிமை அல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்று பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் இன்னமும் புதிய பெயர்களை வருகிற நாட்களில் சேர்த்துக் கொண்டே வருவோம் என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்த தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை மும்முரமாக உத்திர பிரதேச அரசு செயல்படுத்திவருவது போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மேலும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube