இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை !

நிலவின் தெற்கு பகுதியில் இஸ்ரோ சந்திராயன் விண்கலத்தை தரையிறக்கி உலக சாதனையை புரிய இருந்தது. அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் சிறப்பாக நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலமும் சரியான வேகத்தில் விண்ணில் சீறி பாய்ந்து கொண்டிருந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரை இறங்குவதாக இருந்தது.

பின்னர்  நிலவிலிருந்து 2.1KM தொலைவில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவிற்கு இடையே உள்ள தொடர்பு துண்டிக்க பட்டது. இதனால் சந்திராயன் 2 விண்கலத்தை இஸ்ரோ நிலவில் தரையிறக்கும் திட்டம் பின்னடைவை சந்தித்தது.  தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு தற்போது நாசாவும் இஸ்ரோவுக்கு உதவ முன்வந்துள்ளது. இந்நிலையில் நாசா வின் ஆய்வு நிலையத்தில் இருந்து விக்ரம் லேண்டருக்கு தொடர்ந்து ஹெலோ சமிஞ்சைகள்  அனுப்பப்பட்டு வருகிறது. LROC ஆர்பிடராலும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.