எனக்குள் ஒளிந்திருக்கும் என்னையே தேடிக்கொள்ள கேதார்நாத் பயணத்தை பயன்படுத்திக் கொண்டேன்-பிரதமர் நரேந்திர மோடி

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர  மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், எனக்குள்

By Fahad | Published: Apr 02 2020 03:02 PM

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர  மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், எனக்குள் ஒளிந்திருக்கும் என்னையே தேடிக்கொள்ள கேதார்நாத் பயணத்தை பயன்படுத்திக் கொண்டேன்.நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற 2வது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளனர். ஒரே ஒரு பெண் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது நம் ஜனநாயகத்தின் பெருமை .எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் .2019 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 61 கோடி மக்கள் வாக்களித்து உள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பொதுமக்களிடம் நீர் சேகரிப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை வைக்கிறேன்.மேலும் ஒரு துளி நீரை கூட வீணாக்காமல் இருக்க அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

More News From water saving