நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியா?காங்கிரஸ் போட்டியா?தமிழக காங்கிரஸ் தலைவர் விளக்கம்

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் .ராதா கிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.

பின்னர்  நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார்.இதனையடுத்து  நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.மேலும் காங்கிரஸ் -திமுக இடையே இது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.