பெண் குழந்தைகளுக்காக விருது வாங்கிய இரண்டு தமிழக மாவட்டங்கள்!

பிரதமர் நரேந்திர மோடியால், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்குதல், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தை அதிகரித்தல் போன்ற கொள்கைகளை முன்னனிலைப்படுத்தி பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளை படிக்கவைப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இதன்மூலம், முதலில் 100 மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் 640 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்கள் என இந்தியாவில் 10 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது கொடுக்க்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த விருதினை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிர்தி ராணி வழங்கினார். இந்த விருதினை டெல்லி சென்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசிய மரியம் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.