பரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு

பரோலில் வந்த நளினி,இன்று  சிறைக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி

By Fahad | Published: Mar 28 2020 05:11 PM

பரோலில் வந்த நளினி,இன்று  சிறைக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,நளினி,சாந்தன்,முருகன்,ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார்,ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இதில் நளினி தனது மகளின் திருமணத்தையொட்டி பரோல் கோரி மனு தாக்கல் செய்தார்.இதில் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது கடந்த ஜூலை 25-ம் தேதி நளினி  பரோலில்  வெளிய வந்தார்.பரோல் நிறைவடைவதை தொடர்ந்து  மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கும் படி நளினி உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒரு மாத பரோலை மேலும் 3 வாரங்கள் நீட்டித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் நளினியின் பரோல் வருகின்ற 15-ம் தேதி மாலை 6 மணியுடன் (அதாவது இன்று) முடிய உள்ள நிலையில்  தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தார்.நளினி அளித்த அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே 7 வாரங்கள் பரோல் கொடுத்து உள்ளதால் மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்க முடியாது எனசென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் பரோலில் வந்த நளினி,இன்று  சிறைக்கு திரும்பினார் .7 வார கால பரோல்  முடிந்து இன்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் நளினி.

More News From rajiv case