கணவருக்காக 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன்

By manikandan | Published: Nov 02, 2019 05:33 PM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன் என 7 பேர் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இதில் அண்மையில் முருகன் அவரது சிறையை சோதனையிட்டபோது, ஒரு ஆண்டிராய்டு போன், சிம் கார்டு, ஹெட் போன் என பல இருந்துள்ளன. இதனை அடுத்து முருகனுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் தனி செல்லிற்கு மாற்றப்பட்டாராம். முருகனின் மனைவியான நளினியையும் சந்திக்க விடுவதில்லையாம். இதனை அடுத்து, முருகனின் மனைவி நளினி கடந்த 26ஆம் தேதி முதல் தனது கணவருக்காக உணவு உண்ணாமல் இருந்து வருகிறார். இது குறித்து சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினர். ஆனால்,  நாளினி தனது கணவரான முருகனை சிறை அதிகாரிகள் கொடுமை படுத்துவதாக குற்றம் கூறியுள்ளாராம்.
Step2: Place in ads Display sections

unicc