சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக வைக்கப்பட்ட தலைப்பில் நடிகராக களமிறங்கும் இயக்குனர் அமீர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்

By manikandan | Published: Dec 04, 2019 07:52 AM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்திற்கு முதலில் நாற்காலி என தலைப்பு வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. பிறகு இந்த படம் அரசியல் படம் இல்லை என கூறி, தர்பார் எனும் தலைப்பில் பட அப்டேட் வெளியாகிவிட்டது. தற்போது நாற்காலி எனும் தலைப்பினை ஏ.ஆர்.முருகதாசிடம் இருந்து வாங்கி அதனை தனது படத்திற்கு வைத்துள்ளார் ஹீரோவான இயக்குனர் அமீர். இந்த படமும் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாக உள்ளதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தை V.Z.துரை இயக்க உள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc