பிரபல நடிகை தமன்னாவை செருப்பால் அடித்த மர்ம நபர் கைது...!!

நடிகை தமன்னா அவர்கள் ஹைதராபாத்தில் ஒரு புதிய நகைக்கடையை திறக்க சென்றிருந்தார்.

By Fahad | Published: Apr 06 2020 12:44 AM

நடிகை தமன்னா அவர்கள் ஹைதராபாத்தில் ஒரு புதிய நகைக்கடையை திறக்க சென்றிருந்தார். அப்போது அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. காரில் இருந்து இறங்கிய தமன்னா தனது ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவர் மீது செருப்பை வீசியுள்ளார். அது தமன்னா மீது படாமல் அருகில் இருந்த பாதுகாவலர் மீது விழுந்தது. சுதாரித்து கொண்ட பாதுகாவலர்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தில் யார் செருப்பு இல்லாமல் உள்ளார் என பார்த்து செருப்பு எறிந்தவரை பிடித்துள்ளனர். விசாரித்ததில் அவர் முஷீராபாத்தை சேர்ந்த கரிமுல்லா என்றும், அவர் தமன்னாவின் தீவிர ரசிகர் என்பதும் தெரியவந்ததுள்ளது. சமீபகாலங்களில் தமன்னா நடித்த படங்கள் எதுவும் தெலுங்கில் வெற்றியடையவில்லை என்ற விரக்தியில் தான் இச்செயலினை தான் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ கிழே https://youtu.be/V2JVwbRKBqo  https://youtu.be/V2JVwbRKBqo