பரபரப்பு..! மது ஒழிப்புக்காக போராடியவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை..!

பரபரப்பு..! மது ஒழிப்புக்காக போராடியவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை..!

  • ஒடிசாவில் மது ஒழிப்புக்காக போராடிய சமூக சேவகரை சுட்டுக்கொலை செய்யப்பபட்டனர்.
  • அபிமன்யூ பாண்டா மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு தொடர்ந்து போராடி வந்தார்.

அண்மை காலமாக மது குறையும் என்று எதிர்பாத்த இந்நிலையில் அது நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. தற்போது ஒடிசா மாநிலத்தின் முன்னணி சமூக சேவகரான அபிமன்யூ பாண்டா காந்தமால் மாவட்டம் பலிகுடா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பத்திரசாகி என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் ஒடிசா மாநிலத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை இவரது கொள்கையாக கொண்டு தொடர்ந்து போராடி வந்தார். இதனால் மது வியாபாரிகள் அவர் மீது கடுமையான கோவத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தனது வீட்டு முன்பு அபிமன்யூ பாண்டா நின்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் அபிமன்யூ பாண்டாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் படுகாயம் அடைந்த அபிமன்யூ சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். அவரை சுட்டவர்கள் யார் என்றும்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றும்? என்பதை அறிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றார்கள்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube