பழைய நிலைமைக்கு திரும்ப என் மனைவியை காரணம் !புகழ்ந்து தள்ளிய டேவிட் வார்னர்

கடந்த 12-ம் தேதி நடந்த ஆஸ்திரேலிய அணியும் ,பாகிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் சதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
இப்போட்டியை ஆர்வமுடன்  நேரில் பார்த்த ரசிகர் ஒருவருக்கு தனது ஆட்டநாயகன் விருதை வழங்கி அனைவரையும் கவர்ந்தார்.பின்னர் பேசிய டேவிட் வார்னர் நீண்ட நாள்கள் கழித்து சதம் அடித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது.நான் பந்து சேதப்படுத்திய பிரச்சனையில் தடை விதிக்கப்பட்ட மூன்று மாதம் மிகவும் கஷ்டப்பட்டேன்.அப்போது என் மனைவி கேன்டிஸ் தான் பக்கபலமாக இருந்தார்.
மேலும் என்னை ஊக்கப்படுத்தி திரும்பவும் பயிற்சியில் ஈடுபட வைத்தார்.கேன்டிஸ் மனவலிமை கொண்ட பெண். நான் பழைய நிலைமைக்கு திரும்ப அனைத்து பெருமையும் எனது மனைவி கேன்டிஸ்ஸை சாரும் என கூறினார்.

author avatar
murugan