என் திருமணம் இங்கு தான் நடக்கும்! இது தான் சாப்பாடு: நடிகை ஜான்வி கபூர்

நடிகை ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளாவார். இவர் கடந்த ஆண்டு வெளியான

By leena | Published: Sep 13, 2019 08:40 AM

நடிகை ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளாவார். இவர் கடந்த ஆண்டு வெளியான தடக் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், என் திருமணம் எங்கு நடக்க வேண்டும் என்பது பற்றி நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன். அதுவும் பாரம்பரிய முறைப்படி திருப்பதியில் தான் திருமணம் செய்து கொள்வேன். அது தான் எனது கனவு என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், என் அம்மா வழியில் தென் இந்திய பெண்ணாக இருந்து திருமணம் செய்ய விரும்புகிறேன். என் திருமணத்தில் இட்டலி, சாம்பார், தயிர் சாதம் போன்றவை இடம் பெரும் என்றும் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc