சிதம்பரத்துக்கு மகனாக பிறந்தது என்னுடைய விதி -புலம்பும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை தொகுதி வேட்பாளர் விவகாரம் குறித்து அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 9 தொகுதிகள் காண வேட்பாளர்களை  அறிவித்தது.ஆனால் சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தது.

Related image

பின்னர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு  சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது.

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதர்சனநாச்சியப்பன் தமாகா சார்பில் நின்ற ப.சிதம்பரத்தை வென்றார்.

 

Image result for சிதம்பரம். பா

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு  சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில்  சிதம்பரத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார் சுதர்சன நாச்சியப்பன்.அவர் கூறுகையில்,  சிதம்பரத்தின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் சிவகங்கை தொகுதி மக்கள் கோபமாக உள்ளனர்.

மேலும்  ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வரக்கூடாது என்று அவர் செயல்படுகிறார், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையாக வெல்லக்கூடாது அதன் பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் பிரதமர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார் பா.சிதம்பரம் என்று சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

அதேபோல்  சிவகங்கை தொகுதி வேட்பாளர் விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், சுதர்சன நாச்சியப்பன் தகுதியான நபர் தான், அவர் கட்சி தலைமை எடுத்த முடிவின்படி நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் விவகாரம் குறித்து அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ப.சிதம்பரத்துக்கு மகனாக பிறந்தது நிச்சயமாக எனது தவறில்லை .ஆனால் அது என்னுடைய விதி ஆகும் என்று கூறினார்.மேலும் சூப்பர் மேனால் கூட அனைத்து வாக்காளர்களையும் நேரில் சந்திக்க முடியாது .எங்கள் குடும்பத்தை போல எந்த குடும்பமும் பொய் வழக்கை சந்தித்ததில்லை .பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்தது கிடையாது.எனக்கு அவ்வளவு நெருக்கடி தந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்காக 11 தேர்தல்களில் பணியாற்றி இருக்கிறேன், வாரிசு அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் என்னை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.வழக்கு தொடுத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

Leave a Comment