மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் மசோதா ! விரைவில் சட்டமாக அமலுக்கு வரும்!

நீண்ட நேர இழுப்பறிகளுக்கு பின்னர் மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா

By dinesh | Published: Jul 30, 2019 07:04 PM

நீண்ட நேர இழுப்பறிகளுக்கு பின்னர் மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது. வாக்கு சீட்டு அடிப்படையில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்தனர். மக்களவையில் கடந்த வாரம் 25ம் தேதி நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடுப்பு மசோதா இன்று மாநிலங்களைவையில் நிறைவேறியது. முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் .  பின்னர் நடந்த வாக்கெடுப்பில், முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் , எதிராக 84 வாக்குகளும் கிடைத்தது.இதன் மூலம், பெரும்பான்மை அடிப்படையில் முத்தலாக் மசோதாவானது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது குறிப்பிட தக்கது. அதே போல், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியை சார்ந்த எம்,பி க்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் மக்களவை மாநிலங்களவை என்று இரு அவைகளிலும்  நிறைவேற்றப்பட்டு இருக்கு முத்தலாக் மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்டுக்கு பின்னர், சட்டமானது அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
Step2: Place in ads Display sections

unicc