துப்பாக்கி-2 எப்போது!! இயக்குனர் முருகதாஸ் அதிரடி அறிவிப்பு!!

Gun-2 anytime !! Director Murugadoss announces action !!

  • 2018 ஆம் ஆண்டு விஜய்-முருகதாஸ் இணைப்பில் உருவான படம் துப்பாக்கி
  • தளபதி விஜய்க்கு இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று கொடுத்தது
முருகதாஸ், நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி,சர்கார் என மூன்று மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இந்த மூன்று படங்களுமே அடுத்தடுத்து இரண்டாம் பாகத்தில் தொடரும் வண்ணம்தான் முடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டபடியே இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் முருகதாசிடம் இந்த மூன்று படங்களில் எந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை வைத்து எடுப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்... இந்த இரண்டு படத்திலும் இரண்டாம் பாகத்திற்கான தொடர்ச்சி இருப்பது போல தான் முடித்திருந்தேன். இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக முதல் எடுக்க விட ஒரு நல்ல கரு கிடைக்க வேண்டும். அதனால் துப்பாக்கி மட்டும் பண்ணலாம் என்ற ஒரு யோசனையில் உள்ளதாக கூறியுள்ளார்.அதற்க்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என கூறினார். மேலும் சீக்கிரம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.