முரசொலி விவகாரம் : பூட்டுப்போட விடுவோமா? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஸ்டாலின் பதில்

முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.அதை பூட்டுப்போட விடுவோமா?

By venu | Published: Nov 10, 2019 04:58 PM

முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.அதை பூட்டுப்போட விடுவோமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அசுரன் படத்தை பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து கருத்து கூறியிருந்தார்.இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து  முதல் பஞ்சமி நிலம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,உரிய நேரத்திற்கு முன்பு திமுக முரசொலி அலுவலக இட  ஆவணத்தை ஒப்படைக்க வில்லையென்றால் தற்காலிகமாக முரசொலி அலுவலகத்திற்கு சீல்வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசுகையில், முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.அதை பூட்டுப்போட விடுவோமா? என்று கேள்வி எழுப்பினார். முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்திருந்தால் அதை வெளியிடாமல் இருப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.
Step2: Place in ads Display sections

unicc