மும்பை கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு...!! சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடிய தமிழர்கள்...!!!!

மும்பையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

By Fahad | Published: Mar 30 2020 03:46 PM

மும்பையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். வாட்ஸ்அப் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்தனர். தமிழ்ப் புத் தாண்டையொட்டி தமிழர்கள் நிர்வகிக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.தமிழர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபட்டனர். செம்பூர் செட்டா நகர் முருகன் கோவில்,மாட்டுங்கா லேபர்கேம்ப் கணபதி தணிகைவேல் முருகன் கோவில், மாட்டுங்கா ஆஸ்திக சமாஜ் உள்ளிட்ட அனைத்து தமிழர் பகுதி கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பக்தர்கள் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பாக அமைய சாமியிடம் வேண்டிக் கொண்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

More News From Tamil puthandu