பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கொரோனாவிற்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் !

இந்தியா முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமாக இருப்பதால், இந்திய பல முன்னெச்சரிக்கை

By leena | Published: Apr 01, 2020 12:18 PM

இந்தியா முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமாக இருப்பதால், இந்திய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, மதுரையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, கொரோனாவிற்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 

இந்த பல்நோக்கு மருத்துமனை புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் என்பதால், இங்கு கொரோனா நோயாளிகளில் தங்க வைப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதிக்க, சிகிச்சை அளிக்க ஏதுவாக 650 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 150 படுக்கை வசதி கொண்ட ஐ.சி.யூ வார்டுகளும் உள்ளது. 

இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், 'உயர் சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கருவிகளும் இங்குள்ளன.' என்று தெரிவித்துள்ளனர். 

Step2: Place in ads Display sections

unicc