கடன் நெருக்கடி நேரத்தில் உதவிய முகேஷ் அம்பானிக்கு நன்றி கூறிய -அனில் அம்பானி

  • கடந்த பிப்ரவரி 20-ம் தேதி  118 கோடி ரூபாய் உச்சநீதிமன்றத்தில் செலுத்தப் பட்டிருந்தது.
  • உச்சநீதிமன்ற உத்தரவுப் படி  19-ம் தேதிக்குள் ரூ 453 கோடி ரூபாய் வழங்க வேண்டிய  நிலைக்கு அனில் அம்பானி தள்ளப்பட்டுள்ளார்.
எரிக்ஸன் ஸ்வீடன் நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனம் . இந்த நிறுவனம், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள், சேவைகள் அளிக்க 2014-ம் ஆண்டு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டி இருந்தது.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி கடனில் இருப்பதால் உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின்படி ரூ.550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் நிறுவனம் சம்மதித்தது.
கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவின் படி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.550 கோடியை செலுத்த வேண்டும்.ஆனால் அந்த தேதி முடிவடைந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் அந்தத் தொகையை செலுத்தவில்லை.
இதனை தொடர்ந்து எரிக்ஸன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அனில் அம்பானி மீது தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அனில் அம்பானியை  குற்றவாளி என அறிவித்தது.
கடந்த பிப்ரவரி 20-ம் தேதி  118 கோடி ரூபாய் உச்சநீதிமன்றத்தில் செலுத்தப் பட்டிருந்தது.மேலும் 4 வாரத்திற்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.453 கோடியை வழங்க வேண்டும் என்றும் இல்லையன்றால்  3 மாதம் சிறை தண்டனை என தெரிவித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவுப் படி  19-ம் தேதிக்குள் ரூ 453 கோடி ரூபாய் வழங்க வேண்டிய  நிலைக்கு அனில் அம்பானி தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வரியாக அனில் அம்பானி செலுத்திய ரூ 260 கோடி ரூபாயை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நிராகரித்தது.
இந்நிலையில் அவருக்கு அளித்த கெடு  19-ம் தேதி முடிவடைய இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் எரிக்சனுக்கு செலுத்த வேண்டிய 459 கோடி ரூபாயை செலுத்தி விட்டதாக தகவல் வெளியானது. இதனை எரிக்ஸன் நிறுவனமும் உறுதி செய்ததாக தகவல்கள் வெளியானது.
எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை  அனில் அம்பானியின் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி கொடுத்துள்ளார். இதையடுத்து தனது சகோதரர் முகேஷ் அம்பானிக்கும் ,  நீடா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி கூறிள்ளார்.
author avatar
murugan

Leave a Comment