மலேசியா முருகன் கோவிலுக்கு பிக்பாஸ்3 கோப்பையை கொண்டு சென்ற முகின்...!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின்

By vidhuson | Published: Oct 12, 2019 03:50 PM

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இவரின் “அன்பு ஒன்று தான் அனாதை” என்ற வசனமும் “நீ தான்” என்ற பாடலும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முகின் தனது சொந்த நாடான மலேசியாவிற்கு திரும்பிச் சென்றுள்ளார். அப்போது மலேசியா விமான நிலையத்தில் முகினின் ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். மலேசியா சென்ற முகின் ராவ், பிரபல முருகன் கோயிலுக்கு தனது பிக்பாஸ்3 கோப்பையையுடன் சென்று வழிபட்டார். இவர் மீண்டும் திரும்பி வரும்போது ரசிகர்களிடம் தனது வெற்றி கோப்பையை காட்டியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc