வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ! இனி இவர்களும் அபராதம் விதிப்பார்கள்

மத்திய அரசு மோட்டர் வாகன சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து அபராத தொகையை 10 மடங்காக உயர்த்தியுள்ளது .இதனால் வாகன ஓட்டிகள் சற்று கலக்கமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகமுழுவதும் தீவிரமான வாகன சோதனை நடைப்பெற்று வருகிறது ஹெல்மெட் ,அணியாமல் ,குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் என விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.இந்த அபராத தொகையை வசூலிக்க போக்குவர்த்து  ஆய்வாளர் மற்றும்  துணை ஆய்வாளர்,மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோருக்கு மட்டும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவல்துறையினர் யாரெல்லாம் அபராத தொகையை வசூலிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட சென்னை உய்ரநீதிமன்ற உத்திரவிட்டது.அதில் சட்ட ஒழுங்கு பிரிவினர்  மற்றும் போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர்கள்  விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk