வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது.!

மதுரை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பர்மா காலனி என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்த கிறிஸ்தவ புல்டர்ஸ் அசெம்ப்ளி சபை நடத்தி வந்தவர் விஜயன் , மேலும் இவர் சில மாதங்களுக்கு முன்பு மதுரை சுப்பிரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை ஒரு மெக்கானிக் மூலம் விற்க திட்டமிட்டு அந்த மெக்கானிக்கிடம் கேட்டார், ஆனால் விஜயனால் மோட்டார் சைக்கிள் குறித்து போதிய விவரங்களை கூற முடியாமல் தவித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அந்த மெக்கானிக் உடனடியாக அங்குள்ள சுப்பிரமணியபுரம் போலீஸாரிடம் தகவலை தெரிவித்தார், இந்த தகவல் கிடைத்ததும் விஜயனை போலீசார் பிடித்து விசாரித்தனர் விசாரணை மேற்கொண்டதில் இது குறித்து காவல்துறையினர் தெரிவித்தது , விஜயன் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் மதுரைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளார், மதுரைக்கு வந்ததும் 10,000 ரூபாய்க்கு வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்துள்ளார், மேலும் அங்கீகரிக்கப்பட்ட திருச்சபையைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் கொரனோ வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக வீட்டு வாடகை கொடுக்க போதிய வருமான மின்றி மோட்டார் சைக்கிளை திருடி பணத்தை கொடுக்க திட்ட மிட்டுள்ளார், மேலும் திருமங்கலம், எஸ்.எஸ்.காலனி, சுப்பிர மணியபுரம் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு பிறபிக்கப்பிட்டிருந்த நிலையில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிகமான மோட்டார் சைக்கிள்களை விஜயன் திருடியது தெரிய வந்துள்ளது.

மேலும் சில வாகனங்களை அடகு வைத்து பணம் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது மேலும் விஜயனுக்கு உதவிய செல்வம் என்ற நபரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.