திருமணம் செய்து கொள்ளுமாறு 10-ம் வகுப்பு மாணவியை சூடு வைத்து துன்புறுத்திய தாய்.!

  • சேலத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது உறவினரான தினேஷ் ரூபன்

By Fahad | Published: Apr 02 2020 06:40 PM

  • சேலத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது உறவினரான தினேஷ் ரூபன் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
  • அந்த மாணவியும், தந்தையும், எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால் அவரது தாய் மாணவியை சூடு வைத்து  துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்திருந்த அவரது உறவினரான தினேஷ் ரூபன் என்பவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு மாணவியும் அவரது தந்தையும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த பெண்ணின் தாய் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி மாணவியின் கைகால்களில் சூடு வைத்து தாய் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை சேலம் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்திய தாயையும், இளைஞர் தினேஷ் ரூபனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.