பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்து புதரில் வீசிய தாய்..! கடித்து குதறிய தெரு நாய் ..!

தைவானை சார்ந்த சியாவோ மெய் (19) வயது இளம்பெண் ஆன்லைன் மூலம் 28 வயது மதிப்புதக்க

By murugan | Published: Nov 10, 2019 06:41 AM

தைவானை சார்ந்த சியாவோ மெய் (19) வயது இளம்பெண் ஆன்லைன் மூலம் 28 வயது மதிப்புதக்க இளைஞரை காதலித்து வந்து உள்ளார்.சியாவோ மெய் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்து உள்ளனர்.பணம் இல்லாமல் சிரமப்பட்ட இவர்களுக்கு கடந்த 08-ம் தேதி ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது.குழந்தை பிறந்ததும் இருவரும் மத்திய தைவானுக்கு தப்பி ஓடியுள்ளனர். இவர்களை சில நாள்களாக பார்க்கமுடியததால் சியாவோ நண்பர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளனர்.இவர்கள் இருவரையும் போலீசார் இந்த வாரம் ஆரம்பத்தில் கண்டுபிடித்தனர்.அவர்களிடம் குழந்தையை பற்றி கேட்டபோது குழந்தை பிறந்ததும் பிளாஸ்டிக் பையில் வைத்து புதர் நிறைந்த பகுதியில் போட்டுவிட்டதாக கூறினர். அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் குழந்தை வீசிய இடத்தில் பார்த்தபோது குழந்தையின் சில எலும்புகள் மட்டுமே போலீசார் கைப்பற்றினர்.மேலும் இருவரையும் கைது செய்து உள்ளனர் .இவர்கள் குழந்தையை கொன்று வீசினார்களா..?இல்லை உயிருடன் விசினார்களா ..? விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வீசிய பகுதியில் தெரு நாய்கள் அதிகம் இருப்பதால் தெரு நாய்கள் குழந்தையை கடித்து குதறி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc