கடத்தப்பட்ட 4 வயது மகளை காப்பாற்ற வீரத்துடன் போராடிய தாய் - வைரல் வீடியோ உள்ளே!

கடத்தப்பட்ட 4 வயது மகளை காப்பாற்ற வீரத்துடன் போராடிய தாய் - வைரல் வீடியோ உள்ளே!

வீட்டுக்குள் இருந்த 4 வயது சிறுமியை கடந்த முயன்றவர்களிடமிருந்து குழந்தையை காத்த தாயின் வீரம், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.

டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் எனும் பகுதியில் தனது சகோதரி வீட்டிற்கே சென்று பணம் பறிப்பதற்காக சகோதரர் செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதாவது சகோதரியின் 4 வயது சிறுமியை கடத்தி 30 முதல் 35 லட்சம் வரை பணம் பறிக்க இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த பெண் வீட்டுக்குள் இருக்கும் பொழுது தண்ணீர் கேட்பது போல கேட்டு விட்டு, அவர் உள்ளே சென்றவுடன் குழந்தையை கடத்த முயன்றுள்ளனர். ஆனால் குழந்தையின் தாய் தைரியமாக தனது குழந்தையை வேகமாக பிடுங்கி எடுத்து விட்டார்கள். கடத்த வந்தவர்கள் ஒன்றுமறியாதவர்கள் போல செல்ல முயன்றபோது அருகில் இருந்தவர்கள் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த பொழுது குழந்தையின் மாமன் தான் தனது மருமகளை கடத்தி பணம் பறிப்பதற்காக இந்த செயலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் முழுவதும் மேல் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

]]>