குழைந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய்..!

வவுனியா-நெடுங்கேணி, பட்டி குடியிருப்பு பகுதியில் கணவர் விபத்தில் இறந்த சோகத்தில்

By surya | Published: Oct 29, 2019 07:01 PM

வவுனியா-நெடுங்கேணி, பட்டி குடியிருப்பு பகுதியில் கணவர் விபத்தில் இறந்த சோகத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் அவரின் இரண்டு வயது மகனான பவித்ரன் இறந்தான். நெடுங்கேணி பட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உதயன். இவர் அண்மையில் ஒரு விபத்தில் காலமானார். இந்நிலையில் இவரது மனைவி இன்று மதியம் தனது 4 வயது பெண் பிள்ளையையும், 2 வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றில் குதிக்க முயன்றாள். அப்பொழுது அருகில் இருந்தவர்கள் அந்தத் தாயை தடுத்து காப்பாற்றியுள்ளனர். இதில் அவளின் இரண்டு வயது மகன் கிணற்றுக்குள்ளே இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நான்கு வயது மகளான சந்தசா, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வவுனியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.ஆனால், செல்லும் வழியிலே அவளும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
Step2: Place in ads Display sections

unicc