காலை விரைவாக எழுந்துவிட்டால் இவ்வளவு நற்பலன்கள் கிடைக்குமா?!

காலை நேரம் விரைவாக எழுந்து சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தால் நமது ஆயுள்

By manikandan | Published: Nov 17, 2019 06:53 AM

காலை நேரம் விரைவாக எழுந்து சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தால் நமது ஆயுள் நீடிக்கும் என ஏற்கனவே படித்து இருந்தோம். தற்போது, காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் விரைவாக எழுந்து விடுவதால் நமக்கு ஞாபகசக்தி அதிகரிக்கும், அடுத்து காலையில் ஜாக்கிங், வாக்கிங், சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களை செய்வது மூலம் பல்வேறு நற்பலன்கள் நமக்கு கிடைக்கிறது. காலை உடற்பயிற்சி மூலம் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கிறது. முன்கோபத்தை கட்டுபடுத்துகிறது. சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டம் சீராக இயங்க ஆரம்பிக்கிறது. மேலும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகமாக கிடைக்கிறது. வயது முதுமையில் வரும் தோல் சுருக்கம் ஆனது தாமதம் ஆகிறது. ஆதலால், காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்திருப்போம் நமது உடல் நலனை பாதுகாப்போம்.
Step2: Place in ads Display sections

unicc