பொது நிவாரண நிதிக்கு இதுவரை 70 கோடிக்கு மேல் வந்துள்ளது – முதல்வர் பழனிசாமி ட்வீட்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. இதனிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்கள் நிதி வழங்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதேபோல மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிதிகளுக்கும் தனிநபர்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பலரும் அவர்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும். நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றி என முதல்வர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்